Home நாடு செமினி: நம்பிக்கைக் கூட்டணி அதிகமான தேர்தல் குற்றங்களை புரிந்துள்ளது!

செமினி: நம்பிக்கைக் கூட்டணி அதிகமான தேர்தல் குற்றங்களை புரிந்துள்ளது!

889
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

கோலாலம்பூர்: சமீபத்தில் நடைபெற்ற முடிந்த செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிகமான தேர்தல் குற்றங்கள் பதிவாகி உள்ளதாக பெர்சே அமைப்புக் கூறியது. கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற ஐந்து தேர்தல்களின் எண்ணிக்கையை விட செமினியில் அதிகமான தேர்தல் குற்றங்கள் பதிவாகி உள்ளதாக பெர்சே அமைப்பின் தலைவர் தோம்ஸ் பான் கூறினார்.

அதிகமான குற்றச்சாட்டுக்களுடன் நம்பிக்கைக் கூட்டணி முதலிடத்தில் உள்ளதாக அவர் கூறினார். சுமார் 21 தேர்தல் குற்றங்களை நம்பிக்கைக் கூட்டணி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தேசிய முன்னணி 13 தேர்தல் குற்றங்களைப் பதிவுச் செய்துள்ளது. 

தேர்தல் ஆணையம் மற்றும் பெர்சே அமைப்பின் மூலம் தேர்தல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், அரசியல் கட்சிகள் சில தைரியமாக சட்டத்தை மீறுவது குறித்து அவர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

பிஎஸ்எம் கட்சியைப் பிரதி நிதித்து போட்டியிட்ட நிக் அஸிஸ் அபிக் அப்துல் மற்றும் சுயேச்சை வேட்பாளர் குவான் சீ ஹெங் எந்த ஒரு தேர்தல் குற்றங்களையும் செய்யவில்லை என அவர் கூறினார்.