பிப்ரவரி 18-ஆம் தேதி, நீதிபதி டான்ஶ்ரீ ரிட்சார்ட் மாலான்ஜுமின் தலைமையிலான ஐந்து உறுப்பினர்கள் கொண்டக் குழு, முகமட் ஹசானின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தின் இம்முடிவினால் ரந்தாவ் சட்டமன்றத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாஸ் கட்சியும் அம்னோவும் ஒரே கட்சியாக இணையுமா, என செய்தியாளர்கள் கேட்ட போது, அதற்கான சாத்தியங்கள் உண்டு என்றாலும், கட்சியின் மேலிடமே இதன் முடிவை வெளியிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.