இதற்கிடையே, மலாயா பல்கலைக்கழகம் முன் அமைந்துள்ள ஓர் உணவகத்தில் நஜிப் பேசிக் கொண்டிருந்த போது ஆறு முதல் எட்டு மாணவர்கள் நஜிப்பை “ஏமாற்றுக்காரர்”, “2.6 பில்லியன் பணம் எங்கே” என்று முழக்கமிட்டனர். இதனால், நஜிப் ஆதாரவாளர்களை மாணவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.
அந்த சம்பவத்தில் மாணவர்கள் கையில் ஏந்தியிருந்த நஜிப்பின் கோமாளி உருவ அட்டைகள் கிழிக்கப்பட்டன. அம்னோவின் உச்சமட்டக் குழு உறுப்பினர் லொக்மான் நூர் அடாம் பத்திரிக்கையாளரின் காணொளியில் ஒரு சில அட்டைகளை கிழிப்பது பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
Comments