Home நாடு நஜிப் மீதான 42 மில்லியன் ரிங்கிட் வழக்கு ஏப்ரல் 3-இல் தொடக்கம்!

நஜிப் மீதான 42 மில்லியன் ரிங்கிட் வழக்கு ஏப்ரல் 3-இல் தொடக்கம்!

1246
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்குச் செந்தமான 42 மில்லியன் ரிங்கிட் பண மோசடி வழக்கு விசாரணை வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்குவதற்கு இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீதிபதி நஸ்லான் முகமட் காசாலி, நேற்று புதன்கிழமைகூட்டரசு நீதிமன்றம் நஜிப்பின் வழக்குகளை கூடிய விரைவில் விசாரிக்க உத்தரவிட்டதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக இது அமைகிறது.

இருப்பினும், அடுத்தடுத்து நடக்க இருக்கும் விசாரணைகளின் தேதியை நீதிமன்றம் வெளியிடவில்லை.

#TamilSchoolmychoice

தம் மீதான குற்றங்களை விசாரிப்பதில், இடையூறு அளிக்கும் வகையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிட்டிருப்பதாக தலைமை அரசாங்க வழங்கறிஞர் டோமி தோமஸ் குற்றம் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை, 1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட் தொடர்பான வழக்கில், அதன் விசாரணையை தொடங்குமாறு கூட்டரசு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஏழு நீதிபதிகளை கொண்ட குழுவிற்கு தலைமை தாங்கிய டான்ஶ்ரீ ரிச்சார்ட் மலாஞ்சும் இந்த தீர்ப்பை வழங்கினார்.

முன்னதாக, பிப்ரவரி 12-இல் தொடங்கி மார்ச் 29 வரை நடக்க வேண்டியிருந்த இந்த வழக்கை இரு முறை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது.