Home நாடு இந்தோனிசிய பணிபெண்களை கொடுமைப் படுத்திய டான்ஶ்ரீ யார்?

இந்தோனிசிய பணிபெண்களை கொடுமைப் படுத்திய டான்ஶ்ரீ யார்?

886
0
SHARE
Ad

ஷா அலாம்: மூன்று இந்தோனிசியப் பணிப்பெண்களை கொடுமைப் படுத்தி சித்திரவதைச் செய்த டான்ஸ்ரீ மற்றும் அவரது மனைவியை காவல் துரையினர் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர். காஜாங் காவல் துறை தலைமையகத்தின் துணைத் தலைவர் அகமட் சாபிர் முகமட் யூசோப் கூறுகையில், இவர்களில் கைது நடவடிக்கை நேற்று காலை 8 மணி அளவில் காஜாங் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது எனக் கூறினார்.

25 வயது முதல் 41 வயது வரையிலும் உள்ள பணிப்பெண்களுக்கு முறையான சம்பளமும் தரப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக அந்த டான்ஶ்ரீயின் வீட்டில் பணி புரிந்து வந்த அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், அப்பணிப் பெண்களின் கடப்பிதழ்களையும் அந்த டான்ஶ்ரீ தம்பதியினர் தங்கள் வசம் வைத்துக் கொண்டதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த காஜாங் நீதிமன்ற நீதிபதி நோர் அபிடா இட்ரீஸ், அந்த தம்பதியினரை ஒன்பது மணிநேர தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், 2007-ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தோரின் கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோரின் சட்டவிரோத கடத்தல் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என அகமட் சாபிர் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த மார்ச் 22-ஆம் தேதி, காஜாங்கில் உள்ள கண்ட்ரி ஹைட்ஸ் ஆடம்பர குடியிருப்புப் பகுதியிலிருந்து அம்மூன்று பணிப்பெண்களும் தப்பித்து வெளியேறி இந்தோனிசிய தூதரகத்தில் அடைக்களம் புகுந்தனர்.