Home நாடு பினாங்கு, ஜோகூர் அம்னோ 1 மில்லியன் மற்றும் 300,000 ரிங்கிட் பணத்தை நஜிப்பிடமிருந்து பெற்றன!

பினாங்கு, ஜோகூர் அம்னோ 1 மில்லியன் மற்றும் 300,000 ரிங்கிட் பணத்தை நஜிப்பிடமிருந்து பெற்றன!

757
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான விசாரணை ஐந்தாவது நாளான இன்று வியாழக்கிழமை தொடரப்பட்டது.

முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார்கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமரின் அம்பேங்க் வங்கிக் கணக்கிலிருந்து, காசோலையாக 1 மில்லியன் ரிங்கிட் பணம் பினாங்கு மாநில அம்னோ தொடர்புக்குழு  பெற்றதாகவும் மேலும் 300,000 ரிங்கிட் பணத்தை ஜோகூர் மாநில அம்னோ பெற்றதாகவும், தேசிய வங்கியின் தலைமை மேலாளர் பட்ரூல் ஹிஷாம் முகமட் கூறினார்.

#TamilSchoolmychoice

அவ்விரண்டு பரிவர்த்தனைகளும் வங்கிக் கணக்கு எண் 2022011906- லிருந்து காசோலைகளாக கொடுக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார். அதே கணக்கில் இருந்து காசோலைகளாக 1 மில்லியன் ரிங்கிட் பணம் சபா மாநில கட்சியான யூபிகேஒவுக்கு வழங்கப்பட்டதாகவும், துன் ரசாக் காப்பகத்திற்கு 400,000 ரிங்கிட் பணம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.   

துணை அரசாங்க வழக்கறிஞரான முகமட் சாய்புடின் ஹஷிம் முசாய்மி அக்காசோலைகளை பரிசோதனைக்காக பட்ரூலின் முன்னிலையில் முன்வைத்த போது, அவற்றை பட்ரூல் உறுதிப்படுத்தினார்.

மேலும், கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி முதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரையிலும் சுமார் 13 காசோலைகள் வெவ்வேறு பெறுனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பட்ரூல் தெரிவித்தார்.

அதே ஆண்டில், ஜனவரி 21-ஆம் வங்கிக் கணக்கு எண் 2022011898 மூலம் ஹபாரிஸாம் வான் மற்றும் ஆயிஷா முபாரக் ஆகியோரின்  கணக்கில் 3.5 மில்லியன் ரிங்கிட் பணம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வங்கிக் கணக்கு மூலமாக ஏஷான் பெர்டான செண்டெரியான் பெர்ஹாட்டுக்கு இரண்டு காசோலைகள் கொடுக்கப்பட்டதாகக் கூறினார். அவை 20 மில்லியன் ரிங்கிட் மற்றும் 103,361.17 ரிங்கிட்டுக்கு உட்பட்டது என பட்ரூல் தெரிவித்தார்.