Home நாடு “சமூக அமைதி – ஒருங்கிணைப்பு விழாவாகக் கொண்டாடுவோம்” – வேதமூர்த்தியின் விசாக தின செய்தி

“சமூக அமைதி – ஒருங்கிணைப்பு விழாவாகக் கொண்டாடுவோம்” – வேதமூர்த்தியின் விசாக தின செய்தி

945
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “ஆசையைத் துறந்தால் துன்பமில்லாத வாழ்வை வாழலாம்; பற்றற்ற வாழ்வே பேரின்பம்” என்பதை உலக உயிர்களுக்கு மென்மையாக எடுத்துரைத்த புத்த பிரானின் தோற்றம், புத்தகயாவில் இருந்த போதி மரத்தடியில் அவர் திருஞானம் பெற்ற திருநாள், அவர் பூரணத்துவம் எய்திய நாள் ஆகியவற்றை ஒருசேர நினைவுகூரும் நாளாக விசாக தினம் பௌத்த சமயத்தவரால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அன்பு-சாந்தி-சமாதானத்தை விரும்பும் மாந்தர் அனைவருக்கும் பொதுவான நாள் விசாக தினம்” என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தன்னுடைய விசாக தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய மக்கள் அனைவரும் சமூக அமைதிக்கும் ஒருமைப்பாட்டு உணர்வுக்கும் உரிய திருநாளாக இந்த நந்நாளைக் கொண்டாடுவோம் என்றும் தேசிய ஒற்றுமை மற்றும சமூக நலத்துறை அமைச்சருமான ‘செனட்டர்’ பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள விசாக தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.