வாஷிங்டன் – அமெரிக்க நிறுவனங்களுடன் சீன நிறுவனங்கள் வணிகங்கள் மேற்கொள்வதற்கு அமெரிக்க அரசாங்கம் விதித்திருக்கும் தடையை எதிர்த்து டெக்சாஸ் மாநிலத்தின் நீதிமன்றம் ஒன்றில் ஹூவா வெய் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தடை அமெரிக்க அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனத் தீர்ப்பு வழங்குமாறு அந்த நீதிமன்றத்தை ஹூவா வெய் கேட்டுக் கொண்டது.
நாட்டின் பாதுகாப்புக்கும் தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கும் மிரட்டல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி இந்த மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவின் ஹூவா வெய் நிறுவனத்திற்கு எதிராக தடை உத்தரவைப் பிறப்பித்தார்.
எனினும் இந்தத் தடையால் அமெரிக்க நலன்கள் மட்டுமே பாதிக்கப்படும் என்றும் தங்களுக்கோ சீனாவின் மற்ற நிறுவனங்களுக்கோ பாதிப்பு ஏதும் இல்லை என ஹூவா வெய் தொடர்ந்து கூறி வருகின்றது.