Home நாடு ஹசிக் அசிஸ் அந்தரங்க செயலாளர் பதவியிலிருந்து இடைநீக்கம்!

ஹசிக் அசிஸ் அந்தரங்க செயலாளர் பதவியிலிருந்து இடைநீக்கம்!

666
0
SHARE
Ad
முகமட் ஹசிக் அசிஸ்

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மின் அலிக்கு எதிராக ஓரினச் சேர்க்கை தொடர்பான காணொளியை வெளியிட்ட ஹசிக் அசிஸ் உடனடியாக மூலத் தொழில் துணையமைச்சரான ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின்னின் அந்தரங்க செயலாளர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மூன்று நாட்களுக்குள் ஹசிக் அவ்வாறு செய்ததற்கான காரணத்தை கூற மறுத்தால் அவரை வேலையிலிருந்து முழுமையாக நீக்கம் செய்வது குறித்து அமைச்சு முடிவெடுத்துள்ளதாக ஷம்சுல் இஸ்கண்டார் கூறினார்.

முன்னதாக இந்த நடவடிக்கையானது தமது அரசியல் வாழ்க்கையை களங்கடிக்கும் முயற்சி என அஸ்மின் அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்திருந்தார். இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தவறான அரசியல் போக்கினை தனது செயலாளர் கொண்டிருப்பதன் அடிப்படியில்தான் தாம் ஹசிக்கை இடைநீக்கம் செய்ததாக ஷம்சுல் கூறினார்.

#TamilSchoolmychoice

எந்தக் காரணத்தைக் கொண்டும் தாம் அருவருக்கத்தக்க அரசியல் போக்கினை ஆதரிக்கப்போவதில்லை என்பதை ஷம்சுல் தெரிவித்துள்ளார்.