Home நாடு பிகேஆர் இளைஞர் பகுதி அஸ்மினை ஆதரிப்பதாகக் கூறவில்லை!- பிகேஆர் இளைஞர் பகுதி

பிகேஆர் இளைஞர் பகுதி அஸ்மினை ஆதரிப்பதாகக் கூறவில்லை!- பிகேஆர் இளைஞர் பகுதி

626
0
SHARE
Ad
முகமட் நஸ்ரி யூனோஸ்- பிகேஆர் துணைத் தலைவர்

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதி துணைத் தலைவர் முகமட் நஸ்ரி முகமட் யூனோஸ் பொருளாதார விவகார அமைச்சரை ஆதரிப்பது ஒட்டுமொத்த இளைஞர் பகுதியினரின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதி தலைவர் அகமட் சுக்ரி சே அப்துல் ராஸாப் கூறினார். 

அவை வெறுமனே முகமட் நஸ்ரியின் தனிப்பட்ட கருத்துஎன்று அகமட் சுக்ரி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், முகமட் நஸ்ரி கலந்து கொண்ட நிகழ்ச்சியானது பிகேஆர் கட்சியின் அதிகாரப்பூர்வ இளைஞர் கூட்டம் அல்ல என்றும், மாறாக ஹில்மான் ஏற்பாடு செய்த ஒரு கூட்டம் என்று அகமட் சுக்ரி கூறினார்.

#TamilSchoolmychoice

தேசிய பிகேஆர் கட்சியின் இளைஞர்கள் அக்கட்சியைச் சார்ந்த இரு உறுப்பினர்களைக் குறித்து வெளியிடப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரத்தில் கட்சியின் அரசியல் பணியகத்தின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக சுக்ரி கூறினார்.

இந்த விவகாரத்தில் கட்சியின் முடிவுக்கு அனைத்து உறுப்பினர்களும் கட்டுப்பட வேண்டும் என்று பிகேஆர் இளைஞர் பகுதி கேட்டுக் கொண்டுள்ளது.