Home நாடு “ ‘ஏன் அன்வார் பிரதமராக இருக்க முடியாது’ புத்தகத்தை எழுதியவரை காவல் துறையே கண்டறியட்டும்!”- அன்வார்

“ ‘ஏன் அன்வார் பிரதமராக இருக்க முடியாது’ புத்தகத்தை எழுதியவரை காவல் துறையே கண்டறியட்டும்!”- அன்வார்

752
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தனக்கு கிடைத்த அச்சுறுத்தல்கள் குறித்து விசாரிக்கவும், ‘ஏன் அன்வார் பிரதமராக இருக்க முடியாதுஎன்ற புத்தக கையெழுத்துப் பிரதியை எழுதியவர் மீதும் தகுந்த நடவடிக்கையை எடுக்க காவல் துறையினடமே ஒப்படைத்து விட்டதாக பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவருக்கு அச்சுறுத்தல் வந்ததை உறுதிப்படுத்திய வேளையில், மேலும் அப்புத்தகத்தை வெளியிடாமல் இருப்பதற்கு 400,000 ரிங்கிட் பணத்தை செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த எழுத்தாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது, பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் யாரென்று பொதுமக்களால் அறியப்பட வேண்டும். மேலும், அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

இது சம்பந்தமாக சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொஹாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.