Home நாடு பாலியல் காணொளி : நியாயமாக நடந்து கொள்ளுங்கள் – மகாதீருக்கு ஹசிக் வேண்டுகோள்

பாலியல் காணொளி : நியாயமாக நடந்து கொள்ளுங்கள் – மகாதீருக்கு ஹசிக் வேண்டுகோள்

761
0
SHARE
Ad
முகமட் ஹசிக் அசிஸ்

கோலாலம்பூர் – அமைச்சர் ஒருவருடனான பாலியல் காணொளி தொடர்பான விவகாரத்தில் பிரதமர் துன் மகாதீர் நடுநிலையோடும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என அந்தக் காணொளியில் காணப்படும் நபரான ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பகிரங்க கடிதம் ஒன்றின் வழி கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்தக் காணொளியில் இருப்பது நான்தான் என்றும் மற்றொருவர் அஸ்மின் அலி என்றும் பகிரங்கமாக அறிவித்த ஹசிக் அப்துல்லா, இந்த விவகாரத்தில் தன்னை ஒரு கறுப்பு ஆடாக சித்தரிக்கிறார்கள் என்று கூறினார்.

ஹசிக் சரவாக், சந்துபோங் பிகேஆர் தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவருமாவார்.

#TamilSchoolmychoice

மிகத் தெளிவான அந்த சர்ச்சைக்குரிய காணொளி துரோகத்தனமாக படம் பிடிக்கப்பட்டு, அந்த விவகாரத்தில் நான் ஒரு கறுப்பு ஆடாக காட்டப்பட்டிருக்கிறேன் என்றும் ஹசிக் கூறினார்.

இந்த விவகாரம் மீதான தனது நிலைப்பாட்டை மகாதீர் மறு ஆய்வு செய்யவேண்டும் என ஹசிக் கேட்டுக் கொள்ளும் அந்தப் பகிரங்கக் கடிதம் ஜூன் 29-ஆம் தேதி ஹசிக்கின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

“மகாதீர் இந்த விவகாரத்தில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். நானும் எனது குடும்பத்தினரும் பணக்காரர்களல்ல. எதிர்காலத்தை எதிர்நோக்க நாங்கள் சிரமப்படுகிறோம்” என்றும் அந்தக் கடிதத்தில் ஹசிக் குறிப்பிட்டுள்ளார்.