Home நாடு “மலாய் கட்சிகளின் இணைப்பு குறித்த மகாதீரின் கருத்துக்கு பக்காத்தான் ஹாராப்பானின் நிலைபாடு என்ன?”- நஜிப்

“மலாய் கட்சிகளின் இணைப்பு குறித்த மகாதீரின் கருத்துக்கு பக்காத்தான் ஹாராப்பானின் நிலைபாடு என்ன?”- நஜிப்

735
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனைத்து மலாய் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்று டாக்டர் மகாதீர் முகமட் அழைப்பு விடுத்தது குறித்து பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை அறிய விரும்புவதாக முன்னாள் அம்னோ தலைவர் நஜிப் ரசாக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முதலில், பிகேஆர், பான், ஜசெக ஆகிய கட்சிகள் தங்களின் கருத்துகளைக் கூறட்டும். பிறகு அம்னோவின் கருத்துகளை கேட்டறிந்து கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

நேற்று வெள்ளிக்கிழமை மலாய் கட்சிகள் அனைத்தும் பெர்சாத்து கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று பெர்சாத்து கட்சியின் தலைவரான மகாதீர் கூறினார்.

#TamilSchoolmychoice

“மகாதீரே, பிறருடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, மலாய்க்காரர்களுக்காக மற்றொரு கட்சியை அமைத்துள்ளார்” என்று நஜிப் கூறினார்.

அம்னோ, பெர்சாத்துவை தவிர்ர்து தற்போது மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கும் கட்சிகளாக பாஸ், அமானா, புத்ரா மற்றும் இகாதான் இருந்து வருகின்றன. பிகேஆர் பல்வேறு இனங்களைக் கொண்ட கட்சியாகினும், மலாய்க்காரர்களின் உறுப்பினர்களை அதிகமாகக் கொண்ட கட்சியாகும்.