Home நாடு பக்காத்தான் ஹாராப்பான் செய்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!- அம்பிகா

பக்காத்தான் ஹாராப்பான் செய்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!- அம்பிகா

831
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் தேச நிந்தனை குற்றச்சாட்டை எதிர்த்து மேல் முறையீடு செய்த வான் ஜி வானின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இது தொடர்பாக கருத்துரைத்த வழக்கறிஞர் டத்தோ அம்பிகா சீனிவாசன், தேச நிந்தனை சட்டத்தை இரத்து செய்யும் வாக்குறுதியை அளித்த பக்காத்தான் ஹாராப்பான், சொல்லியபடி அதனை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், இந்த குற்றச்சாட்டின் போது, வான் ஜிக்கு எதிராக சிறைத்தண்டனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைக் கழகத்தின் தலைவருமான அம்பிகா கூறுகையில், இத்தகைய செயல் அவமானத்திற்கு உரியது என்று கூறினார்.

#TamilSchoolmychoice

தேச நிந்தனை சட்டம் அகற்றப்பட்டே ஆக வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அம்பிகா, இச்சட்டம் இருக்கும் வரையில் அதிகார அத்துமீறலுக்கு ஆட்பட்டே இருக்கும் என்று குறிப்பிட்டார்.

தேவையற்ற காரணங்களைக் கூறிக்கொண்டிருக்காமல் கூடிய விரைவில் இதற்கான தீர்வினை பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.