Home நாடு “ஜோகூர் அரண்மனையுடன் கருத்து வேறுபாடு இருந்தது!”- ஹசான் காரிம்

“ஜோகூர் அரண்மனையுடன் கருத்து வேறுபாடு இருந்தது!”- ஹசான் காரிம்

761
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: பாசிர் கூடாங் சட்டமன்ற உருப்பினரும் ஜோகூர் மாநில பிகேஆர் கட்சித் தலைவருமான ஹசான் காரிம் பதவி விலகுவது குறித்த தமது முடிவில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் அவரை பதவி விலகுவதிலிருந்து தடுத்தும் அவர் பதவி விலகியிருப்பது பல கேள்விகளுக்கு உட்படுத்தியிருந்தது. இதன் காரணமாக தாம் அன்வாரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.   

மலேசியாகினியைத் தொடர்பு கொண்டபோது, ஜோகூர் அரண்மனைக்கும் தமக்கும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் உள்ளதாக ஹசான் ஒப்புக்கொண்டார். அவரது பதவி விலகலுக்கு அதுவும் ஒரு காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

கட்சி மற்றும் கட்சித் தலைவருக்கு நான் ஒரு சுமையாக இருக்க விரும்பவில்லைஎன்று அவர் கூறினார்.

கடந்த ஜூலை 12-ஆம் தேதி ஜோகூர் மாநில பிகேஆர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ஹசான் காரிம் விலகியதாகக் கூறப்பட்டது.