Home One Line P1 “யானைகளை கொல்பவர்களுக்கு பிரம்படி வழங்கப்பட வேண்டும்!” – காவல் துறைத் தலைவர்

“யானைகளை கொல்பவர்களுக்கு பிரம்படி வழங்கப்பட வேண்டும்!” – காவல் துறைத் தலைவர்

644
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சட்டவிரோத வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டதாக நம்பப்படும் கினாபாத்தாங்கான் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மேலும் ஒரு பிக்மி யானையின் மரணம் குறித்து காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் வருத்தம் தெரிவித்தார்.

உயர் அந்தஸ்துள்ள நபர்களை உள்ளடக்கியிருந்தாலும், வேட்டையாடுபவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் அவர் உறுதியளித்தார்.

நான் அவர்களை வேட்டையாடுவேன். காவல் அதிகாரிகளை விரைவாக விசாரிக்கக் கோரியுள்ளேன். இது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளேன்.

#TamilSchoolmychoice

இருப்பினும், ஒரு உயர் அந்தஸ்துள்ளவர்கள் சம்பந்தப்பட்டதற்கான சான்றுகள் இருந்தால், அவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் சட்டத்தை மீறவும், திருடவும் துணிகிறார்கள். நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார்.

இக்குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு தாம் அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க உள்ளதாகவும், அதிகபட்சமாக அவர்களுக்கு பிரம்படியும் கூடுதலாக வழங்கப்பட வேண்டும்மென்றும் கூறினார்.

இந்த விலங்குகளிடம் கொடுமையாக நடந்துக் கொண்டவர்கள், கொடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு பிரம்படி வழங்கப்பட வேண்டும். அது எனது விருப்பம். எதிர்காலத்தில் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் என்று நம்பிகிறேன்.” என்று அவர் மேலும் கூறினார்.