Home One Line P1 தஞ்சோங் பியாய்: காலை 10 மணி வரையில் 25 விழுக்காட்டினர் வாக்களிப்பு!- தேர்தல் ஆணையம்

தஞ்சோங் பியாய்: காலை 10 மணி வரையில் 25 விழுக்காட்டினர் வாக்களிப்பு!- தேர்தல் ஆணையம்

657
0
SHARE
Ad

தஞ்சோங் பியாய்: தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்கள் தங்களது புதிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் இன்று சனிக்கிழமை மொத்தம் 27 வாக்குச் சாவடிகள் காலை 8 மணி முதல் திறக்கப்பட்டது.

காலை 10 மணி நிலவரப்படி 25 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்றைய இடைத்தேர்தலில் மொத்தம் 52,471 வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்த உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமட் பாரிட் முகமட் ராபிக் காலமானதைத் தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த இடைத்தேர்தலில் ஆறு முனைப் போட்டி நிலவுகிறது. நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து கர்மெய்ன் சர்டினி களம் இறங்குகிறார். மேலும், தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து டத்தோஶ்ரீ டாக்டர் வீ ஜெக் செங், வெண்டி சுப்பிரமணியம் (கெராக்கான்), டத்தோ டாக்டர் பாட்ருலஷாம் அப்துல் அசிஸ் (பெர்ஜாசா) மற்றும் இரு சுயேச்சை வேட்பாளர்களான டாக்டர் அங் சுவான் லாக் மற்றும் பாரிடா ஆரியணி அப்துல் காபார் போட்டியில் இறங்குகின்றனர்.

முன்னதாக, நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரும், தேசிய முன்னணி வேட்பாளரும் தங்களை வாக்குகளைச் செலுத்தினர்.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடக்கும் ஒன்பதாவது இடைத்தேர்தலாக இது கருதப்படுகிறது.

கடந்த செவ்வாயன்று, 280 வாக்காளர்கள் முன்கூட்டியே தங்களின் வாக்குகளைச் செலுத்தினர்.

இந்த இடைத்தேர்தலுக்கு சுமுகமான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் தனது 1,019 பணியாளர்களை அணிதிரட்டியுள்ளது, இந்த இடைத்தேர்தலில் 70 விழுக்காடு வாக்காளர்கள் தங்களின் உரிமைகளை நிறைவேற்றுவர் என்று தேர்தல் ஆணையம் இலக்கு வைத்துள்ளது. அதிகாரப்பூர்வ முடிவு இன்று இரவு 10 மணிக்கு அறிவிக்கப்படும்.