Home One Line P2 உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களின் பெயர்களை மகனுக்குச் சூட்டிய போரிஸ் ஜோன்சன்

உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களின் பெயர்களை மகனுக்குச் சூட்டிய போரிஸ் ஜோன்சன்

703
0
SHARE
Ad
கேரி சைமண்ட்ஸ் – போரிஸ் ஜோன்சன் தம்பதியர் – கோப்புப் படம்

இலண்டன் – கடந்து போயிருக்கும் காலமும், நடப்பு காலமும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு வாழ்க்கையிலேயே மறக்க முடியாத காலகட்டங்களாக அமைந்து விட்டன.

பிரதமராக, பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றும் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையை நிறைவேற்றி முடித்த களைப்பு அடங்குவதற்கு முன்னரே கொவிட்19 தொற்று பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அவரைப் பற்றிக் கொண்டது.

அந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோதே, போரிஸ் ஜோன்சனுக்கும் கொவிட்19 தொற்று பாதித்துள்ளது என்ற அதிர்ச்சிகரமான நிலையை அவர் எதிர்நோக்கினார்.

#TamilSchoolmychoice

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மரணத்தின் எல்லையைத் தொட்டுவிட்டுத் திரும்பினார் அவர். தான் சிகிச்சை பெற்று வந்தபோதே, தனக்கு மரணம் நேர்ந்தால் அதற்கான முன்னேற்பாடுகளும் ஒருபுறம் செய்யப்பட்டன என்ற உருக்கமான தகவலையும் குணமடைந்த பின்னர் ஜோன்சன் தெரிவித்திருக்கிறார்.

இதே காலகட்டத்தில்தான்ன் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் கேரி சைமண்ட்ஸ் என்ற பெண்மணியும் அவரால் கர்ப்பமுற்று அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார். ஜோன்சன் தீவிர சிகிச்சையில் இருந்த காலகட்டத்திலேயே அவர் தனது குழந்தையைப் பிரசவித்தார்.

அந்தக் குழந்தைக்கு வில்பிரெட் லாவ்ரி நிக்கோலாஸ் ஜோன்சன் (Wilfred Lawrie Nicholas Johnson) என்ற பெயரை ஜோன்சன் தம்பதிகள் சூட்டியுள்ளனர்.

அந்த பெயருக்கான விளக்கத்தையும் ஜோன்சனின் துணைவி சைமண்ட்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை ஏப்ரல் 29-ஆம் தேதி பிறந்த தங்களின் குழந்தைக்கு முதல் பெயராக அமைந்திருக்கும் வில்பிரெட் என்பது போரிஸ் ஜோன்சனின் தாத்தா பெயராகும். அடுத்து வரும் லாவ்ரி என்ற பெயர் ஜோன்சனின் துணைவியார் சைமண்ட்சின் தாத்தா பெயராகும்.

அடுத்து வரும் நிக்கோலாஸ் என்பது ஜோன்சன் கொவிட்19 சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சையளித்து உயிரைக் காப்பாற்றிய இரண்டு மருத்துவர்களின் நினைவாக வைக்கப்பட்டிருக்கும் பெயராகும். போரிஸ் ஜோன்சனின் உயிரைக் காப்பாற்றிய டாக்டர் நிக் பிரைஸ் மற்றும் டாக்டர் நிக் ஹார்ட் என்ற இரு மருத்துவர்களை நினைவுகூரும் வண்ணம் நிக்கோலாஸ் என்ற பெயர் அந்தக் குழந்தைக்கு சூட்டப்பட்டிருக்கிறது.

அதே வேளையில் தன்னை நன்கு கவனித்துக் கொண்ட மகப்பேறு மருத்துவனை மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் கேரி சைமண்ட்ஸ் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.