Home One Line P2 லோகேஷ் கனகராஜ் அரசியல் படத்தில் கமல்ஹாசன்

லோகேஷ் கனகராஜ் அரசியல் படத்தில் கமல்ஹாசன்

780
0
SHARE
Ad

சென்னை : கார்த்தி நடிப்பில் “கைதி” படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் – விஜய் சேதுபதி நடிப்பில் இயக்கிய மாஸ்டர் படம் கொவிட்-19 பாதிப்புகளால் இன்னும் வெளிவராமல் இருக்கிறது.

இதற்கிடையில் ரஜினியை வைத்து ஒரு படத்தை லோகேஷ் இயக்கவிருப்பதாகவும் அதை கமல்ஹாசனே தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தில் ரஜினி – கமல் இருவரும் இணைந்து நடிப்பதாகவும் ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டன.

ரஜினி நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் “அண்ணாத்தே” படத்தின் படப்பிடிப்பும் கொவிட்-19 பிரச்சனைகளால் பாதிப்புக்குள்ளாகி தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

எனவே லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருந்த படமும் தள்ளிப் போனது.

இதற்கிடையில் கமல்ஹாசன் நடிப்பில் முழுக்க முழுக்க அரசியல்  பிரச்சனைகளைக் கொண்ட ஒரு படத்தை லோகேஷ் இயக்கவிருக்கிறார் என ஆகக் கடைசியான ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமல்ஹாசனே இந்தப் படத்தைத் தயாரிக்கவிருக்கிறார். குறுகியகாலத் தயாரிப்பாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறவிருக்கும் தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக வெளியிடவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி விரைவில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் தொடங்கப்படவிருக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததும் லோகேஷ் கனகராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.