Home One Line P2 கொவிட் 19 : இந்தியா பிரேசிலைக் கடந்து இரண்டாவது இடத்தில்!

கொவிட் 19 : இந்தியா பிரேசிலைக் கடந்து இரண்டாவது இடத்தில்!

758
0
SHARE
Ad

புதுடில்லி : உலகமெங்கும் கொவிட்-19 பாதிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் கடந்த ஒரே நாளில் 90,632 எண்ணிக்கையிலான புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 4,113,811 ஆக உயர்ந்தது.

உலக அளவில் கொவிட்-19 பாதிப்பில் முதலாவது இடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் பிரேசிலும் இருக்கின்றன. தற்போது பிரேசிலைப் பின்னுக்குத் தள்ள இரண்டாவது இடத்திற்கு இந்தியா வந்துள்ளது.

#TamilSchoolmychoice

உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியா மிக மோசமாக கொவிட்-19 சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுநாள் வரையில் உலக அளவில் கொவிட்-19 சம்பவங்களில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.

மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

இதற்கு அடுத்ததாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையில் கடந்த 5 மாதங்களாக இந்தியா முழுவதும் நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ இரயில் சேவைகள் நேற்று திங்கட்கிழமை செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியிருக்கின்றன.

மார்ச் மாதம் முதற்கொண்டே இந்த இரயில் சேவைகள் அனைத்திந்திய அளவில் நிறுத்தப்பட்டிருந்தன.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மனமகிழ் மையங்கள், உல்லாச பூங்காக்கள் போன்றவை இன்னும் மூடப்பட்டு இருக்கின்றன.

கொவிட்-19 பிரச்சனைகளால் இதுவரை சந்தித்திராத அளவுக்கு மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை இந்தியா எதிர்நோக்கி இருக்கிறது.