Home One Line P1 23 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாட்டிற்குள் நுழையத் தடை

23 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாட்டிற்குள் நுழையத் தடை

678
0
SHARE
Ad

புத்ராஜெயா: நீண்டகால நுழைவு அனுமதிப் பெற்ற 23 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடைகளை மலேசிய குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை அமலுக்கு வந்த இந்த தடைகள், அதிகமான கொவிட்-19 சம்பவங்கள் குறிப்பிடப்பட்ட நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அறிவிக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது.

#TamilSchoolmychoice

அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷியா, பெரு, கொலம்பியா, தென் ஆப்பிரிக்கா, மெக்சிக்கோ, ஸ்பெயின், அர்ஜெண்டினா, சிலி, ஈரான், வங்காளதேசம் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாட்டிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா, பாகிஸ்தான், பிரான்ஸ், துருக்கி, இத்தாலி, ஜெர்மனி, ஈராக், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனிசியா நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டது.

இந்த தடைப் பட்டியல் குடிநுழைவுத் துறை முகநூல் பக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பதிவிடப்பட்டது.

மலேசியர்களின் வாழ்க்கைத் துணைவர்கள், மாணவர்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 3- ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 7- ஆம் தேதி தொடங்கி 150,000- க்கும் மேற்பட்ட கொவிட் -19 சம்பவங்களை பதிவு செய்யும் நாடுகளின் குடிமக்களுக்கு நுழைவுத் தடை விதிக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

அதிக ஆபத்துள்ளதாகக் கருதப்படும் பல நாடுகளை அரசாங்கம் பட்டியலில் சேர்க்கும் என்றும் அவர்களின் குடிமக்கள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என்றும் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறியிருந்தார்.