Home One Line P2 ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சரை சந்திக்கிறார்

ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சரை சந்திக்கிறார்

786
0
SHARE
Ad

மா

மாஸ்கோவில் ரஷிய பிரதமர், சீன வெளியுறவு அமைச்சர் ஆகியோருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடில்லி : இந்தியா- சீனா எல்லைப்பகுதியான கிழக்கு லடாக்கில் பதட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. பங்கோங் ட்சோ என்னும் ஏரியைச் சுற்றியுள்ள மலைப் பிரதேசங்களில் உயரமான பகுதிகளில் சீனாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ முகாம்களைப் பார்வையிடும் வகையில் இந்தியா தனது துருப்புகளை நிறுத்தி வைத்திருக்கிறது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் மாஸ்கோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாஸ்கோ வந்தடைந்தார்.

#TamilSchoolmychoice

இதே மாநாட்டில் கலந்து கொள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கலந்து கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து மாநாட்டு இடைவேளையில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர்.

இதே மாநாட்டுக்கு வருகை தந்த இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த வெள்ளிக்கிழமையன்று சீனத் தற்காப்பு அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகளினால் எந்தவிதப் பலனும் விளையவில்லை.

இந்த சூழலில் ஜெய்சங்கர்-வாங் யீ இடையிலான பேச்சு வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.