Home One Line P1 சபா நட்சத்திரத் தொகுதிகள் # 1 : ஷாபி அப்டால் போட்டியிடும் செனால்லாங் தொகுதி

சபா நட்சத்திரத் தொகுதிகள் # 1 : ஷாபி அப்டால் போட்டியிடும் செனால்லாங் தொகுதி

782
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : இன்று சனிக்கிழமை நடைபெற்று முடிந்த சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து பல தொகுதிகள் சபா அரசியல் பிரபலங்கள் போட்டியிடும் நட்சத்திரத் தொகுதிகளாக உருவெடுத்திருக்கின்றன.

அவற்றில் முதலாவதாக அனைவரின் பார்வையும் பதிந்திருப்பது சபா நடப்பு முதலமைச்சர் ஷாபி அப்டால் போட்டியிடும் செனால்லாங் தொகுதியாகும். செம்பூர்ணா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் இந்தத் தொகுதியில் ஷாபி அப்டால் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார்.

செம்பூர்ணா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 3 தொகுதிகளில் ஒன்று செனால்லாங். சுலாபாயான், புகாயா ஆகியவை மற்ற இரண்டு தொகுதிகளாகும். செம்பூர்ணா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் ஷாபி அப்டால் கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

2018 பொதுத் தேர்தலில் 5,301 வாக்குகள் பெரும்பான்மையில் மிக எளிதாக செனால்லாங் சட்டமன்றத் தொகுதியில் ஷாபி அப்டால் வெற்றி பெற்றார்.

தேசியக் கூட்டணி சார்பில் பெர்சாத்து கட்சியின் நோர்சமான் உத்தோ நைம் இங்கு போட்டியிடுகிறார். பிபிஆர்எஸ், பிசிஎஸ், அஸ்னோ, ஆகிய கட்சிகளும் இங்கே போட்டியில் குதித்திருக்கின்றன.