Home One Line P1 சபா தேர்தல்: பாஸ் எந்தத் தொகுதியிலும் போட்டியிடாமல் ஒதுங்கியது

சபா தேர்தல்: பாஸ் எந்தத் தொகுதியிலும் போட்டியிடாமல் ஒதுங்கியது

512
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: எதிர்வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் பாஸ் கட்சி எந்தத் தொகுதியிலும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது. 10 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம் என பாஸ் இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.

தங்களின் சகோதரத்துவக் கட்சிகளுக்கு வழிவிடும் வகையில் அரசியல் நட்புறவு கருதி, தாங்கள் சபா தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.

இதற்கிடையில் நேரடிப் போட்டியில் இல்லாவிட்டாலும், அம்னோ, பெர்சாத்து கட்சிகளின் வழி தாங்களும் சபா தேர்தல் களத்தில் செயல்படுவதாக பாஸ் கட்சியின் வியூகப் பொறுப்பாளர் சூஹ்டி மார்சுகி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தேசியக் கூட்டணி, தேசிய முன்னணி என இரு அணிகளின் வேட்பாளர் பட்டியலிலும் பாஸ் இடம் பெறவில்லை.

பல இடங்களில் இந்த இரு அணிகளுக்கும் இடையில் எழுந்திருக்கும் மோதல் காரணமாக பாஸ் ஒதுங்கிக் கொண்டிருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அப்படியே போட்டியிட்டாலும் தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிடுவதா அல்லது தேசிய முன்னணி சார்பில் போட்டியிடுவதா அல்லது சொந்த சின்னத்திலேயே போட்டியிடுவதா என்பது போன்ற குழப்பங்கள் எழுந்ததால் பாஸ் போட்டியிடாமலேயே சபா தேர்தலைத் தவிர்த்து விட்டதாகக் கருதப்படுகிறது.