Home One Line P1 சபா தேர்தல்: செப்டம்பர் 22 முன்கூட்டிய வாக்களிப்பு

சபா தேர்தல்: செப்டம்பர் 22 முன்கூட்டிய வாக்களிப்பு

560
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா மாநிலத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு நாளை செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமாக 16,877 காவல் துறையினர், இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின்  குடும்பத்தினர் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 55 வாக்குச் சாவடிகளில் நாளை செவ்வாய்க்கிழமை அவர்கள் வாக்களிப்பார்கள்.

7,487 இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் துணைவர்கள் வாக்களிக்க உள்ளனர். 9,390 காவல் துறை பணியாளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையத் செயலாளர் இக்மால்ருடின் இஷாக் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“ஆரம்ப வாக்குப்பதிவு மையம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கொவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து, அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளான கூடல் இடைவெளி, முகக்கவசம் அணியும் நடைமுறை, கிருமித்தூய்மி பயன்பாடு, உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் வருகையாளர் பதிவு போன்றவை வாக்களிப்பின் போது நடைமுறையில் இருக்கும் என்று அவர் கூறினார்.

“முதற்கட்ட வாக்களிப்புக்கான அனைத்து வாக்குப் பெட்டிகளும் காவல் நிலையத்தில் வைக்கப்படும். வாக்குச் சீட்டு எண்ணிக்கை செப்டம்பர் 26 அன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும்

“தேர்தல் ஆணையம் நிர்ணயித்த வாக்கு எண்ணும் இடத்தில் வாக்குச் சீட்டுகள் கணக்கிடப்படும்” என்று அவர் கூறினார்.

ஜூலை 30-ஆம் தேதி மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து சபாவில் தேர்தல் நடைபெறுகிறது. வருகிற செப்டம்பர் 26 பொது வாக்களிப்புக்கான தேதிகளாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.