Home One Line P1 மேற்படிப்பைத் தொடர்கிறார் சைட் சாதிக்

மேற்படிப்பைத் தொடர்கிறார் சைட் சாதிக்

709
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த வாரம் தனது புதிய கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்திருந்த மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் இப்போது தமது கல்வியை தொடர்வதற்கான அடுத்தக் கட்டத்தில் நுழைந்துள்ளார்.

அரசியலில் சுறுசுறுப்பாக இருப்பதைத் தவிர, முன்னாள் இளைஞர் விளையாட்டு அமைச்சரும், இப்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தமது மேற்படிப்புக்காக செல்ல இருப்பதை அறிவித்துள்ளார்.

நேற்றிரவு இதை அறிவித்த சைட் சாதிக், லீ குவான் யூ பொது சேவை திட்டத்தில், உதவித்தொகையுடன் கூடிய இருக்கைப் பெற்றதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த ஜூன் மாதத்திலிருந்து தாம் இந்த நற்செய்தியை தனக்குத் தானே வைத்திருந்ததாக அவர் கூறினார். ஆனால், நேற்று அவரது முதல் வகுப்பு தொடங்கியதை அடுத்து, அவரது நண்பர்களுக்காக பகிரப்பட்டது என்று அவர் கூறினார்.

“ஓர் இளைஞராக, சேவை செய்வதற்கான எனது திறனை மேம்படுத்த நான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பெர்சாத்து கட்சி இளைஞர் அணியின் முன்னாள் தலைவராக சைட் இருந்தார்.

அண்மையில், முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தொடங்கிய கட்சியில் இணையாது, இளைஞர்களை மையப்படுத்திய ஒர் கட்சியை சைட் தொடங்கினார். அக்கட்சி இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முடா என்று பெயரிட்ட அக்கட்சியை, சைட் அரசியல் கட்சியாக செப்டம்பர் 17 அன்று பதிவு செய்தார்.

இதற்கிடயில், கட்சியின் பெயர் ‘முடா’ என்று இருந்தாலும் அதன் உறுப்பினர்களுக்கு வயது வரம்பு இருக்காது என்று சைட் சாதிக் கூறியிருந்தார்.

அவர் இளைஞர்களை மையமாகக் கொண்ட கட்சியைத் தொடங்கப்போவதாக முன்னதாக அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் அத்தகைய கட்சியின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கியதுடன், உள்ளூர் அரசியல் களத்தில் அதன் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டனர்.

அண்மையில், தமது புதிய கட்சியினை விமர்சித்த முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு பதில் கூறும் வகையில், தமது கட்சி அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என்று தெரிவித்திருந்தார்.

இது ஒன்றே இளைஞர்கள் அவருடன் ஒன்றிணைய ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.

அண்மையில், சைட் சாதிக்கின் இளைஞர்கள் கட்சி மலாய்க்காரர்களை மேலும் பிளவு படுத்தும் என்று மகாதீர் குறிப்பிட்டிருந்தார். அவரது கட்சி வெற்றிப் பெற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கருத்துரைத்த சைட் சாதிக், தாம் துன் மகாதீரின் கருத்தினை மதிப்பதாகவும், தமது தற்போதைய பணியானது, அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைப்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

“நான் இங்கு மலாய்க்காரர்களின் சேவகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை. அனைத்து மலேசியர்களின் சேவகனாக இருக்க விரும்புகிறேன். நான் மலாய்க்காரர்களை ஒன்றிணைக்க மட்டும் இல்லை, அனைத்தும் மலேசியர்களையும் ஒன்றிணைக்க விரும்புகிறேன்”

“நான் துன் மகாதீரை மதிக்கிறேன். ஓர் இளைஞனாக, நம்பிக்கையுடன், மலேசியாவில் பன்முகத்தன்மை நம் பலம் என்று நான் மிகவும் நம்புகிறேன்.

“அவர் மலாய்க்காரர்களின் வாக்குகளை சிதைப்பதைப் பற்றி பேசுகிறார், ஆனால், நான் அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

இளைஞர்களை அடிப்படையாகக் கொண்ட கட்சி பற்றிய சைட் சாத்திக்கின் கருத்தை “வயதானவர்களை” ஓரங்கட்டிவிடும் என்று மகாதீர் விமர்சித்திருந்தார்.

எவ்வாறாயினும், புதிய கட்சி இளைஞர்களால் வழிநடத்தப்படும் என்றும், இளைஞர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமானது அல்ல என்றும் சைட் சாதிக் கூறியிருந்தார்.