Home One Line P1 அண்டை நாட்டில் உள்ளவர்கள் வாக்களிக்க வரலாம்- காவல் துறை விழிப்புடன் உள்ளது

அண்டை நாட்டில் உள்ளவர்கள் வாக்களிக்க வரலாம்- காவல் துறை விழிப்புடன் உள்ளது

575
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இரு நாட்டின் குடியுரிமைகளைப் பெற்ற அண்டை நாட்டிலுள்ளவர்கள் சபா தேர்தலில் வாக்களிக்க வரும் சாத்தியக்கூறுகளை காவல் துறை மறுக்கவில்லை.

மேலும், அவர்களால் பிரச்சனைகள் எழலாம் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்தினர் குறிப்பிட்ட ஒரு தரப்பினரை ஆதரித்து வாக்களிக்க வரலாம் என்ற கருத்துகள் வெளிவந்துள்ளதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த நோக்கத்துடன் நாட்டிற்குள் நுழைந்து பொது மக்களின் அமைதியைக் கெடுக்க நினைப்போருக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நபர்களை நாங்கள் கைதுசெய்து, அவர்களுக்கு சட்டப்பூர்வ குடியுரிமை இருப்பதைக் கண்டறிந்தால், நாங்கள் அவர்களின் அடையாள அட்டையை இரத்துசெய்து, மலேசியாவிலிருந்து வெளியேற்றுவோம்.

“இந்த நாட்டில் ஜனநாயக வழிமுறையை ஒருபோதும் சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள்” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

சபாவில் முதற்கட்ட வாக்களிப்பு செயல்முறை சீராக இயங்குவதாகவும் கட்டுப்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

“எல்லா அதிகாரிகளும் உடனடியாக வாக்களிக்க வெளியே செல்வார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் வானிலை எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும் என்று நான் காண்கிறேன்.” என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், கொவிட்19 கட்டுப்பாடுகளை விழிப்புடன் பின்பற்றுமாறு அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மொத்தமாக 16,877 காவல் துறையினர், இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இன்று வாக்களிப்பர் என்று நேற்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
மொத்தம் 55 வாக்குச் சாவடிகளில் அவர்கள் வாக்களித்து வருகின்றனர்.

7,487 இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் துணைவர்கள் வாக்களிக்க உள்ளனர். 9,390 காவல் துறை பணியாளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையத் செயலாளர் இக்மால்ருடின் இஷாக் தெரிவித்திருந்தார்.

“வாக்குப்பதிவு மையம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

“முதற்கட்ட வாக்களிப்புக்கான அனைத்து வாக்குப் பெட்டிகளும் காவல் நிலையத்தில் வைக்கப்படும். வாக்குச் சீட்டு எண்ணிக்கை செப்டம்பர் 26 அன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும்

“தேர்தல் ஆணையம் நிர்ணயித்த வாக்கு எண்ணும் இடத்தில் வாக்குச் சீட்டுகள் கணக்கிடப்படும்” என்று அவர் கூறினார்.

ஜூலை 30-ஆம் தேதி மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து சபாவில் தேர்தல் நடைபெறுகிறது. வருகிற செப்டம்பர் 26 பொது வாக்களிப்புக்கான தேதிகளாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.