Home One Line P1 காவல் துறையினர் ஊழல் விவகாரம்- எம்ஏசிசியுடன் ஒத்துழைக்கத் தயார்

காவல் துறையினர் ஊழல் விவகாரம்- எம்ஏசிசியுடன் ஒத்துழைக்கத் தயார்

544
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காவல் துறையினர் ஊழலில் சம்பந்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டால் எந்த சமரசமும் செய்யப்படாது என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல் துறையினர் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் (எம்ஏசிசி) தரப்பிலிருந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

புக்கிட் அமான் நேர்மை, தரநிலை இணக்கத் துறை மற்றும் புக்கிட் அமான் வணிக குற்ற புலனாய்வுத் துறை ஆகியப் பிரிவினர் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இந்த விவகாரம் குறித்து எந்தவொரு அறிக்கையும் எம்ஏசிசியால் பகிரப்படும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். அவர்களின் விசாரணையில் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட ஊழலின் கூறுகள் இருந்தால், அவர்கள் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் வரவேற்கிறோம், ”என்று அவர் கூறினார்.

குற்றவியல் கும்பல்களிடமிருந்து இலஞ்சத்திற்கு ஈடாக நாட்டிற்குள் மக்காவு மோசடிகளைப் பாதுகாக்கும் மூத்த அதிகாரிகள் மற்றும் இயங்கலை சூதாட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு காவல் துறை பணியாளர்கள் செயல்படும் குற்றச்சாட்டுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

காவல் துறையினர் சம்பந்தப்பட்ட ஊழல் தொடர்பான எந்தவொரு கூற்றுக்கும் எம்ஏசிசி விசாரணையை வரவேற்பதாகவும், அதே நேரத்தில் விசாரணைகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்படும் என்றும் அப்துல் ஹாமிட் உறுதியளித்தார்.