Home One Line P2 டிரம்ப் 3.27 விழுக்காடுடன் புளோரிடாவில் முன்னிலை வகிக்கிறார்

டிரம்ப் 3.27 விழுக்காடுடன் புளோரிடாவில் முன்னிலை வகிக்கிறார்

760
0
SHARE
Ad

வாசிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 3.27 விழுக்காடுடன் புளோரிடாவில் முன்னிலை வகிக்கிறார். முதல் அதிகாரப்பூர்வ முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

10,793,616 வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் டிரம்ப் தனது போட்டியாளரான ஜோ பைடனை 51.19 – 47.92 விழுக்காட்டுடன் வீழ்த்தியுள்ளார்.

புளோரிடா அனைத்து மாநிலங்களிலும் மூன்றாவது மிக உயர்ந்த தேர்தல் வாக்குகள் தொகுப்பைப் பெற்றுள்ளது. அதாவது 29 வாக்குகள் தொகுப்பை வைத்துள்ளது.

#TamilSchoolmychoice

இது கடந்த ஐந்து அதிபர் தேர்தல்களில், குடியரசுக் கட்சி வேட்பாளர்களை மூன்று முறையும், ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவாக இரண்டு முறையும் ஆதரித்துள்ளது. 2016- ஆம் ஆண்டில் டிரம்ப் 113,000 வாக்குகளுடன் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்தார்.

பைடென், டிரம்ப் வெள்ளை மாளிகையில் ஆதிக்கம் செலுத்த குறைந்தபட்சம் 270 தேர்தல் வாக்குகள் தொகுப்பைப் பெற வேண்டும்.