Home One Line P2 ஹாங்காங் விவகாரத்தில் சீன அதிகாரிகள் மீது தடைகள்

ஹாங்காங் விவகாரத்தில் சீன அதிகாரிகள் மீது தடைகள்

597
0
SHARE
Ad

வாஷிங்டன் : பதவி விலகிச் செல்லும் இறுதிக் கட்டத்திலும் சீனா மீதான நெருக்கடிகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறங்கியிருக்கிறார்.

ஹாங்காங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த  சீன அரசாங்கத்தின் அதிகாரிகள் அவர்களைத் தகுதியிழக்கச் செய்யும் முடிவுகளை எடுத்திருந்தனர். இதில் சம்பந்தப்பட்ட சீன நாட்டு அதிகாரிகள் மீது அனைத்து விதங்களிலும் தடைகளை விதிக்கும் முடிவை டிரம்ப் அரசாங்கம் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, ஹாங்காங் தலைமைச் செயல் அதிகாரி கேரி லாம் மீது இதே போன்ற தடை நடவடிக்கையை டிரம்ப் அரசாங்கம் எடுத்தது.

#TamilSchoolmychoice

சுமார் 12 சீன அதிகாரிகள் மீதான தடைகளை அமுல்படுத்த அமெரிக்க அரசாங்கம் முனைந்துள்ளது.

சீன நாட்டு வங்கிகள் மீதும் தடைகள் விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ள காரணத்தால் இன்று திங்கட்கிழமை காலையில் ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் சீன வங்கிகளின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

தனது பதவிக் காலத்தின்போது சீனாவின் மீது பெரும் பகைமை பாராட்டிய டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறப்போகும் இறுதிக் கட்டத்தில் மேலும் சிக்கலான, கூடுதலான நெருக்கடிகளை சீனாவுக்கு ஏற்படுத்தி விட்டுச் செல்வார் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.