Home One Line P2 ரஜினி : அனைத்து தலைவர்களின் பிறந்த நாள் வாழ்த்துகளும் குவிந்தன

ரஜினி : அனைத்து தலைவர்களின் பிறந்த நாள் வாழ்த்துகளும் குவிந்தன

559
0
SHARE
Ad

சென்னை : நேற்று டிசம்பர் 12-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். எனினும், தனது மூத்த சகோதரரின் ஆசிகளைப் பெற பெங்களூர் சென்று விட்டார் ரஜினி. சென்னையில் இல்லை.

என்றாலும் நூற்றுக்கணக்கான இரசிகர்கள் அவரது இல்லத்தின் முன் குவிந்து தங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதற்கிடையில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அவருக்கு சமூக ஊடகங்களின் வழி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

பின்னர் ரஜினியும் தனது டுவிட்டர் தளத்தில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டும் தனியாக நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டார்.

அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கி தமிழக அரசியலில் களமிறங்கத் தயாராகும் ரஜினிகாந்தை எந்த ஓர் அரசியல் தரப்பும் எதிர்ப்பு காட்டாமல் ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.

இலட்சக்கணக்கான இரசிகர்களைக் கொண்ட ரஜினிகாந்த்துக்கு எதிர்ப்பு காட்டினால் தங்களின் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என எல்லாக் கட்சிகளும் கணிக்கின்றன.

இதற்கிடையில் எதிர்வரும் டிசம்பர் 31-ஆம் தேதி தனது புதிய கட்சி அறிவிப்பை ரஜினி வெளியிடவிருக்கின்றார். கட்சி தொடர்பான அனைத்து விவகாரங்களையும் அவர் தீர்த்து தயார் நிலையில் இருக்கிறார் என ஆரூடங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் டிசம்பர் 30-ஆம் தேதி தமிழகத்திற்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வருகை தரவிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் ரஜினியைச் சந்திக்கவிருக்கிறார் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.