Home One Line P1 பெஜுவாங், முடாவின் பதிவு நிராகரிக்கப்பட்டதை சங்கப் பதிவாளர் விளக்க வேண்டும்

பெஜுவாங், முடாவின் பதிவு நிராகரிக்கப்பட்டதை சங்கப் பதிவாளர் விளக்க வேண்டும்

577
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் சங்கப் பதிவாளர் பெஜுவங் மற்றும் முடா கட்சியைப் பதிவு செய்ய நிராகரித்ததை விமர்சித்துள்ளார். இந்த முடிவு ஏற்கத்தக்கது அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகளை இணைப்பதற்கும், நிறுவுவதற்கும் உரிமை மத்திய அரசியலமைப்பில் உள்ளது என்ரு அவர் கூறினார்.

“எனவே இந்த கட்சிகளுக்கு ஏன் பதிவு மறுக்கப்பட்டது என்பதற்கான காரணங்களையும் வலுவான வாதங்களையும் தெரிவிக்க சங்கப் பதிவாளரிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பதிவு அலுவலகம் என்பது அரசாங்கத்திற்குள் உள்ளவர்கள் தங்கள் விருப்பப்படி கையாளப்பட வேண்டிய அரசியல் கருவி அல்ல. வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்,” என்று அன்வர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று, பெஜுவாங் மற்றும் முடா கட்சிகளின் பதிவு நிராகரிக்கப்பட்டதாக சங்கப் பதிவாளர் மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பியிருந்தது.