Home One Line P1 சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கு கிட் சியாங் ஆதரவு

சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கு கிட் சியாங் ஆதரவு

487
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலத்தில், சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கான அழைப்புகளுக்கு ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தனது ஆதரவை வழங்கி உள்ளார்.

அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான் தற்போதைய அவசரகால சூழ்நிலையில் சிறப்பு அமர்வுக்கு ஆதரவளிக்க கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அணிதிரட்ட முயற்சிக்கிறார் என்பது இன்று தெரிய வந்தது.

அவசரகாலத்தின் போது நாடாளுமன்றம் இடைநிறுத்தப்பட்டிருந்தாலும், அவசரகால (அத்தியாவசிய அதிகாரங்கள்) கட்டளை 2021 படி, மாமன்னர் நாடாளுமன்ற அமர்வை பொருத்தமானதாகக் கருதினால் , இது அனுமதிக்கப்படுகிறது என்று லிம் சுட்டிக்காட்டினார்.

#TamilSchoolmychoice

நாட்டின் கொவிட் -19 நிலைமை, உலக வீதத்தை விட மோசமான வேகத்தில் மோசமடைந்து வருவதாக லிம் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 1- ஆம் தேதி முதல் இன்று வரை, உலகளாவிய கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை 1.48 மடங்கு அதிகரித்துள்ளது, ஆனால் மலேசியாவில், இதே காலகட்டத்தில் 2.46 மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

“இந்த காரணத்திற்காக, கொவிட் -19 தொற்றுநோயைப் பற்றி ஒரு சிறப்பு நாடாளுமன்றத்திற்கான அழைப்பை நான் ஆதரிக்கிறேன். மலேசியாவை தொற்றுநோயிலிருந்து காப்பாற்ற தேசிய காரணத்திற்காக ஒன்றுபடுவதற்கு இனம், மதம், அரசியலைப் பொருட்படுத்தாமல் அனைத்து மலேசியர்களுக்கும் நாடாளுமன்றம் ஒரு முன்மாதிரி வைக்கட்டும்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக இன்று, அம்னோ அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் சிறப்பு நாடாளுமன்ற அமர்வுக்கு ஆதரவளிக்குமாறு கடிதம் அனுப்பியதாக தெரியவந்தது.