Home One Line P1 கெடா: பாஸ் கட்சியுடன் பணி புரிவதை விட, தன்மானத்தோடு இருந்து விடுவோம்!

கெடா: பாஸ் கட்சியுடன் பணி புரிவதை விட, தன்மானத்தோடு இருந்து விடுவோம்!

986
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கெடா மந்திரி பெசார், முகமட் சனுசி முகமட் நோர், மற்ற இனங்களுடன் பழகுவதற்கான அனுபவமோ திறனோ இல்லாத ஒரு தலைவர் என்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் வர்ணித்துள்ளார்.

அரசியல் நலன்கள் காரணமாக மஇகா சனுசிக்கு ஆதரவளிக்காது என்று அவர் எச்சரித்தார்.

“எங்களின் பணி புரியும் தன்மை மாறிவிட்டது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற இடங்களை விட தன்மானத்தோடு வாழ நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதே இதன் பொருள், ” என்று அவர் எம்எம்டியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாட்டில் இன, கலாச்சார மற்றும் மத வேறுபாட்டின் சகிப்புத்தன்மையின் மதிப்புகளை புறக்கணிக்கும் முடிவுகளை எடுக்கும் சனுசியின் நடவடிக்கை பின்னர் 15- வது பொதுத் தேர்தலை பாதிக்கும்,” என்று விக்னேஸ்வரன் கூறினார்.

கெடாவில் பாஸ் கட்சியுடன் மஇகா பணியாற்றுவது கடினம் என்று அவர் கூறினார். மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்களைப் பற்றி சனுசி அக்கறை காட்டவில்லை.

“கெடா மந்திர் பெசாருடன் எங்களுக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லை. ஆனால் அவர் தனது கடமைகளைச் செய்யும் விதம் அவருக்கு பிற இனங்களுடன் பழகும் திறனும், அனுபமும் இல்லை என்பதைக் காட்டுகிறது, ” என்று அவர் கூறினார்.

ஜனவரி 28- ம் தேதி தைப்பூசத் திருவிழாவின் போது வழங்கப்பட்ட விடுமுறையை இரத்து செய்ததற்கான முடிவை மீண்டும் திரும்பப்பெற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சனுசியை வலியுறுத்தியுள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“ஆனால், அவர் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார். விடுப்பை இரத்து செய்ய கெடா மந்திரி பெசார் எடுத்த முடிவு நியாயமற்றது, “என்று அவர் கூறினார்.

சனுசியுடனான கட்சி தகராறைத் தொடர்ந்து மத்திய மட்டத்தில் தேசிய கூட்டணி அரசாங்கத்தில் கூட்டணிக் கட்சியாகளாக மஇகா மற்றும் பாஸ் இடையேயான உறவு குறித்து கருத்து தெரிவிக்க விக்னேஸ்வரனிடம் கேட்கப்பட்டபோது, அதனை அவர் விரிவாகக் கூறவில்லை. ஆனால் கெடாவில், மஇகா சனுசியுடன் தொடர்ந்து ஒத்துழைப்பது கடினம் என்று வலியுறுத்தினார்.

தைப்பூசத்திற்கான விடுப்பை சனுசி இத்து செய்ததையடுத்து மஇகா மற்றும் சனுசிக்கு இடையிலான சமீபத்திய தகராறு எழுந்தது.

கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, திருவிழாவின் போது வழங்கப்பட்ட விடுமுறை இரத்து செய்யப்பட்டதால் இந்த கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

இந்த நடவடிக்கையைக் கண்டித்து மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சவரணம், பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் உட்பட அறிக்கை வெளியிட்டிருந்தனர்.