Home One Line P1 அம்னோ-பிகேஆர் இணைந்தால் 2018 வெற்றி திரும்பும்!

அம்னோ-பிகேஆர் இணைந்தால் 2018 வெற்றி திரும்பும்!

543
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2018-இல் நம்பிக்கை கூட்டணிக்கு எப்படி துன் மகாதீர் மலாய்க்காரர்களின் வாக்குகளைக் கொண்டு வந்தாரோ, அவ்வாறே அம்னோ, நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்தால் சாத்தியப்படும் என்று முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

செல்வாக்குடன் உள்ள மற்றொரு மலாய் தலைவர்களுடன் இணைவது தேர்தல் வெற்றிக்கான எதிர்க்கட்சியின் உறுதியான பாதையாக இருக்கும் என்று ஒரு முகநூல் பதிவில் அவர் கூறினார்.

“அம்னோ மலாய் வாக்காளர்களைக் கொண்டு வரும் திறனைக் கொண்ட தலைவர்களைக் கொண்டுள்ளது. மேலும், பிகேஆர்-அம்னோ கூட்டணி தேசிய முன்னணி ஆதிக்கத்தின் கீழ் இருந்த சிறப்பான நாட்களைக் கொண்டுவரும். இது நாட்டிற்கு நிலைத்தன்மையைக் கொண்டுவரும், மேலும் பல நல்ல விஷயங்களை ஒரு நிலையான அரசாங்கத்துடன் செய்ய முடியும்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

எதிர்க்கட்சியில் உள்ள சிலர் அத்தகைய இணைப்பை எதிர்க்கக்கூடும் என்றாலும், இந்த கட்சிகளை ஒன்றிணைப்பது அன்வாரிடமே உள்ளது என்று அவர் கூறினார்.

“அம்னோவும், அன்வார் மற்றும் ஜசெக மக்களின் எதிரிகள் என்ற தனது சொந்த பிரச்சாரத்தை நம்புவதை நிறுத்த வேண்டும். கடந்த கால விவகாரங்களை தூக்கி எறிய வேண்டும் – அப்போதுதான் புதிய கனவுகளை அடைய முடியும். அம்னோ தலைவர்கள் இந்த சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்வார்கள், ஏனென்றால் அவர்கள் தங்கள் வரலாற்றில் முதல்முறையாக, அதிகாரத்தில் இருப்பவர்களிடமிருந்து நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள். அன்வாரைப் போலவே அவர்களும் மாற்றங்களை விரும்புவார்கள். இதனால் எதிரிகளை நிர்மூலமாக்க அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை முடிவுக்கு வரும். ” என்று அவர் கூறினார்.