கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி), காவல் துறையில் தவறான இயக்கம் குறித்த பிரச்சனையை புகார் செய்யத் தேவையில்லை என்று காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பதை மீண்டும் வலியுறுத்திய அவர், தன்னைக் கவிழ்ப்பதற்கான உள் நகர்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்றார்.
“நான் இந்த விஷயத்தை புக்கிட் அமானின் நேர்மை மற்றும் இணக்க தரநிலை பிரிவுடன் விவாதித்தேன். நடவடிக்கை எடுக்கப்படும், ” என்று அவர் இன்று புக்கிட் அமானில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணையம் தேவையில்லை என்றும் ஹாமிட் கூறினார்.
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் தியோ, காவல் துறை தலைவரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எம்ஏசிசியின் மௌனத்தை கேள்வி எழுப்பியிருந்தார்.
கடந்த வாரம், காவல் படையில் இளைய காவல் அதிகாரிகள் தம்மை வீழ்த்துவதற்காக தவறான இயக்கத்தை காவல் படைக்குள்ளேயே இயங்குவதாகக் கூறியிருந்தார்.