Home நாடு 15-வது பொதுத் தேர்தலில் எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது – மகாதீர் கணிப்பு

15-வது பொதுத் தேர்தலில் எந்த தனிக்கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது – மகாதீர் கணிப்பு

550
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எந்த ஒரு கட்சியும் தனித்து நிலையான ஆட்சி அமைக்க முடியாது என துன் மகாதீர் கூறியிருக்கிறார். எந்த தனிக் கட்சியும் இப்போதைக்கு ஆதிக்கம் செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.

உத்துசான் மலேசியா மலாய் நாளிதழின் இன்றைய ஞாயிறு பதிப்புக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

“எல்லாக் கட்சிகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளப் போவதால், ஒவ்வொரு கட்சியும் சிறிய எண்ணிக்கையிலான தொகுதிகளையே வெல்ல முடியும். இறுதியில் அதிகமானத் தொகுதிகளில் வெற்றி அடைபவர்கள் சிறுபான்மை மத்திய அரசாங்கத்தை மட்டுமே அமைக்க முடியும்” என்றும் மகாதீர் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

“எனவே, மீண்டும் பல கட்சிகளின் கூட்டணி அரசாங்கம்தான் அமையும். 15-வது பொதுத் தேர்தல் நாட்டின் அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாக இருக்காது” என்றும் மகாதீர் தெரிவித்தார்.

“அம்னோ உட்கட்சித் தேர்தலை நடத்தினாலும், நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் தலைவர்கள் விலகாமல் அந்தக் கட்சியும் மக்களின் ஆதரவைப் பெற முடியாது. பெர்சாத்துவுக்கும் அதே நிலைமைதான். அந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெற முடியாது” என மகாதீர் கருத்துரைத்திருக்கிறார்.