Home நாடு கொவிட்-19 நிதிக்கு அரசு ஊழியர்கள் பங்களிக்கலாம்

கொவிட்-19 நிதிக்கு அரசு ஊழியர்கள் பங்களிக்கலாம்

523
0
SHARE
Ad


கோலாலம்பூர்: பொது சேவையில் உள்ள ஊழியர்கள் குறைந்தபட்சம் 10 ரிங்கிட்டை கொவிட் -19 நிதிக்கு பங்களிக்க வேண்டும் என்று கியூபெக்ஸ் முன்மொழிந்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு முதல் கொவிட் -19 பரவுவதைத் தடுக்க பாடுப்பட்டு வரும் முன்னணிப் பணியாளர்களுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அதன் தலைவர் அட்னான் மாட் கூறினார்.

“இந்த தொற்று தனியார் துறையில் பணிபுரியும் மற்றும் சிறு வணிகம் செய்யும் அரசு ஊழியர்களின் தம்பதிகள் உட்பட பல்வேறு குழுக்களை பாதித்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம். மக்கள் மீதான பொருளாதார தாக்கத்தை மேலும் குறைக்க அரசாங்கம் பெரும் செலவுகளைச் செய்துள்ளது.

#TamilSchoolmychoice

“இந்த 10 ரிங்கிட் பங்களிப்பை ஒப்புக் கொண்டால் அரசாங்கத்தால் சம்பள விலக்கு மூலம் இதனை செய்ய முடியும். அதிக பங்களிப்பு செய்ய விரும்பும் அரசு ஊழியர்கள் இருந்தால், அது அவர்களின் முடிவு, அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்ட நடைமுறைகள் மூலம் செயல்படுத்தப்படலாம், ” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.