Home நாடு பொதுத் தேர்தலை நடத்தத் தேவையில்லை- அம்னோ கருத்தை பாஸ் வரவேற்கிறது

பொதுத் தேர்தலை நடத்தத் தேவையில்லை- அம்னோ கருத்தை பாஸ் வரவேற்கிறது

569
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடு கொவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்வதால், இப்போதைக்கு 15-வது பொதுத் தேர்தல் நடைபெற வேண்டிய அவசியமில்லை என்ற அம்னோவின் கருத்தை பாஸ் வரவேற்கிறது.

அதன் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் கூறுகையில், இந்த நேரத்தில் அரசாங்கத்தின் கவனம் கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதால், இந்த நடவடிக்கை பொருத்தமானது என்று பாஸ் கருதுவதாகக் கூறினார்.

” மத்திய மற்றும் மாநில அரசாங்க இயந்திரங்களின் கவனம் கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதாகும் என்று பாஸ் கருதுகிறது. இதேபோல், அரசியல் கட்சிகளும் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துகின்றன,” என்று அவர் திங்களன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.