கோலாலம்பூர் : தலைநகரில் மாநகர்மன்றத்தின் (டேவான் பண்டாராயா) மக்கள் வீடமைப்பு வீடுகளுக்கான உரிமக் கடிதங்கள் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 25) 10 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா குமார் இந்த உரிமக் கடிதங்களை வழங்கினார். கோலாலம்பூர் மாநகர் மன்ற தலைமையகக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
உரிமக் கடிதங்கள் பெற்றவர்களில் 9 பேர் இந்தியர்களாவர். ஒருவர் சீனராவார்.
ஏற்கனவே இருமுறை இதுபோன்று பிபிஆர் எனப்படும் மக்கள் வீடமைப்பு உரிமக் கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
முதல் முறை 20 குடும்பங்களுக்கும், இரண்டாம் முறை 10 குடும்பங்களுக்கும் இவ்வாறு உரிமக் கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
உரிமக் கடிதங்கள் வழங்குவது குறித்து கருத்துரைத்த சந்தாரா குமார், தனது அமைச்சின் கீழ் செயல்படும் மாநகர் மன்றம் தொடர்ந்து வீடுகள் தேவைப்படும் குடும்பங்களின் தேவைகளை இன பேதமின்றிப் பூர்த்தி செய்யும் எனத் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற உரிமக் கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சியின் படக் காட்சிகளை இங்கே காணலாம்: