Home நாடு தாப்பா தொகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பெட்டிகள் வழங்கப்படுகின்றன

தாப்பா தொகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பெட்டிகள் வழங்கப்படுகின்றன

531
0
SHARE
Ad

தாப்பா : மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கடந்த 3 தவணைகளாக பிரதிநிதிக்கும் நாடாளுமன்றத் தொகுதியான தாப்பாவில், கொரோனா கோரத்தண்டவமாடும் இவ்வேளையில், கடந்த மார்ச் 2010 தொடங்கி பல்வேறு உதவிகள் அந்தத் தொகுதி  மக்களுக்குச் சென்றடைந்துள்ளன. குறிப்பாக நடமாட்டக் கட்டுப்பாடு 1, 2, 3 பிறப்பிக்கப்பட்ட காலம் முதல் இதுவரை 30,000 க்கும் மேற்பட்ட உணவுப் பெட்டிகள், பூர்வீகக் குடிகள் உட்பட தாப்பா மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அண்மையில் பிரதமர் அறிவித்த திட்டம் வழியாக மேலும் 7,000 உணவுப் பெட்டிகள் தாப்பா வட்டார மக்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 3 தவணைகளாக, 13 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்,  அந்த தொகுதி மக்கள் நலனில் அன்பும் அக்கறையும் கொண்டு பல திட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

உதவி தேவைப்படும் தாப்பா நாடாளுமன்றத்தைச் சேர்ந்த சுற்றுவட்டார மக்கள், தொகுதி அலுவலகத்தில் தங்களைப் பதிந்து கொள்ளலாம். அங்குள்ள மக்கள் சேவை மையத்தைச் சார்ந்தவர்கள் உடனடியாக பதிந்தவர்களின் இல்லம் சென்று அவர்களுக்குரிய உணவுப் பெட்டிகளை வழங்குவர்.

மேலும் தாப்பா நாடாளுமன்ற மக்கள் சேவை மையம், வருமானம் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுபவர்களை அடையாளம் கண்டு உணவுப் பெட்டிகளை வழங்குவார்கள்.

இதுதவிர அரசு சாரா இயக்கங்கள், தன்னார்வலர்கள் கொடுக்கும் தகவலைக் கொண்டும், பொது மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடந்த ஜுலை 4 முதல் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை ஏறத்தாழ 3000 குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த உணவுப் பெட்டிகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும், தாப்பா நாடாளுமன்றச் சேவை மையத்தில் இயங்கிவரும் பாரிசான் மற்றும் அனைத்து சேவையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

வழங்கப்படும் உதவிகள் தாப்பா மக்கள் அனைவரையும் சென்றடையப் பாடுபடும் தன்னார்வலர்களின் சேவை மனப்பான்மைக்கும், உழைப்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

உயிருக்கு பயந்து, வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் அவதியுறும் இவ்வேளையில் வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றான உணவு அனைவருக்கும் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்ற . அரசாங்கத்தின் உதவிகள் அனைத்தும் போற்றத்தக்கவையாகும்.

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டிய காலகட்டம் இதுவாகும்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். இங்கே அனைத்து உயிரினங்களும் வாடுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. மனிதத்தோடு, நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் நம்மால் இயன்றதைக் கொடுத்து மகிழ்வோம் என தாப்பா மக்களுக்கு உணவுப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர் .