Home நாடு நம்பிக்கையில்லாத் தீர்மானம் : செப்டம்பர் 7-ஆம் தேதிதான் தாக்கல் செய்யப்படும்

நம்பிக்கையில்லாத் தீர்மானம் : செப்டம்பர் 7-ஆம் தேதிதான் தாக்கல் செய்யப்படும்

620
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடு முழுமையிலும் எதிர்பார்க்கப்படும் மொகிதின் யாசினிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிதான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், முன்கூட்டியே அல்ல என தொடர்பு தொடர்பு, பல்ஊடக அமைச்சர் சைபுடின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதற்காக, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்படாது என்றும் அவர் கூறினார்.

செப்டம்பர் 6-ஆம் தேதி மாமன்னர் உரையோடு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.ஆனால் அதற்கு முன்பாக சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு அதில் மொகிதின் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதிக்கப்படும் என்ற ஆரூடங்களும் பரவி வருகின்றன.

#TamilSchoolmychoice

எனினும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிதான் நடைபெறும், முன்கூட்டியே அல்ல என தொடர்பு, பல்ஊடக அமைச்சர் சைபுடின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்திற்கான முன்அறிவிக்கைகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் செப்டம்பர் 6-க்கு முன்னதாக சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடு நடத்தப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.