Home நாடு மாமன்னர் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார்

மாமன்னர் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார்

899
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நோக்கத்தோடு நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) தொடங்கி சந்திக்கிறார் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா.

இன்று வெவ்வேறு நேரங்களில் அவர் கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார்.

நேற்று திங்கட்கிழமை மொகிதின் யாசின் சமர்ப்பித்த பதவி விலகல் கடிதத்தை மாமன்னர் ஏற்றுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வரை காபந்து பிரதமராக இருக்கும்படி மாமன்னர் மொகிதின் யாசினைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் கட்சியின் தலைவர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினரை அடுத்த பிரதமராக நியமிக்கும் அதிகாரத்தை மாமன்னர் கொண்டிருக்கிறார்.

அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், ஆகியோருடன் பெஜூவாங் கட்சிக்கும் மாமன்னர் இன்று சந்திப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

பெஜூவாங் கட்சியின் சார்பில் துன் மகாதீரின் மகன் முக்ரிஸ் மகாதீர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பக்காத்தான் ஹாரப்பான் கட்சித் தலைவர்களுக்கும் இன்று மாமன்னரைச் சந்திக்க அரண்மனையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு ஆகியோர் இன்று மாமன்னரைச் சந்திக்கின்றனர்.

நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசான் ஹாருண், நாடாளுமன்ற மேலவையின் தலைவர் ராய்ஸ் யாத்திம் ஆகியோரும் மாமன்னரின் சந்திப்புகளின் போது உடனிருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.