Home நாடு இஸ்மாயில் சாப்ரிக்கு வாழ்த்து தெரிவித்த ஆஸ்திரேலியப் பிரதமர் – இந்தோனிசிய அதிபர்

இஸ்மாயில் சாப்ரிக்கு வாழ்த்து தெரிவித்த ஆஸ்திரேலியப் பிரதமர் – இந்தோனிசிய அதிபர்

594
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : பிரதமராகத் தேர்வு பெற்றிருக்கும் இஸ்மாயில் சாப்ரிக்கு அண்டை நாட்டுத் தலைவர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தொலைபேசி வழி வாழ்த்து தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தோனிசிய அதிபர் ஜோகா விடோடோவும் தொலைபேசி வழி வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகோ விடோடோ தன்னைத் தொலைபேசி வழி அழைத்து வாழ்த்து தெரிவித்ததாகவும், தங்களின் உரையாடல்களின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக நல்லுறவுகளை வலுப்படுத்தத் தாங்கள் உறுதியெடுத்துக் கொண்டதாகவும் இஸ்மாயில் சாப்ரி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்கோட் மோரிசன் தொலைபேசி வழி இஸ்மாயில் சாப்ரியை அழைத்து தனது வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்.

அதே வேளையில் சீனாவின் பிரதமர் லீ கெ காங் தனது வாழ்த்துச் செய்தியை இஸ்மாயில் சாப்ரிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.