Home நாடு மலாக்கா : தேசிய முன்னணி 12, பெரிக்காத்தான் 2, பக்காத்தான் 4 (இரவு 9.45 மணி...

மலாக்கா : தேசிய முன்னணி 12, பெரிக்காத்தான் 2, பக்காத்தான் 4 (இரவு 9.45 மணி நிலவரம்)

474
0
SHARE
Ad
அட்லி சஹாரி

மலாக்கா : (இரவு 9.45 மணி நிலவரம்) அதிகாரபூர்வத் தகவல்களின்படி இரவு 9.45 மணி வரையில் தேசிய முன்னணி 12 தொகுதிகளையும், பெரிக்காத்தான் 2 தொகுதிகளையும், பக்காத்தான் 4 தொகுதிகளையும் வெற்றி கொண்டிருக்கிறது.

ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என கணிக்கப்பட்ட பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி இரண்டு தொகுதிகளை வென்றிருப்பது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது.

அதே வேளையில் அமானா கட்சி சார்பில் புக்கிட் கட்டில் தொகுதியில் போட்டியிட்ட அட்லி சஹாரி வெற்றி பெற்றிருக்கிறார். பக்காத்தான் ஹாரப்பான் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது ஜசெகதான். பிகேஆர் இதுவரையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.