Home நாடு “தாய்மொழிப் பள்ளிகளை கட்டம் கட்டமாக மூடுங்கள்” – பெர்சாத்து கட்சி கோரிக்கை

“தாய்மொழிப் பள்ளிகளை கட்டம் கட்டமாக மூடுங்கள்” – பெர்சாத்து கட்சி கோரிக்கை

717
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சீன, தமிழ்ப் பள்ளிகள் உள்ளிட்ட தாய்மொழிப் பள்ளிகளை கட்டம் கட்டமாக மூடிவிட வேண்டும் என பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதியின் தகவல் பிரிவுத் தலைவர் முகமட் அஷ்ராப் முஸ்தாகிம் பாட்ருல் முனீர் அறைகூவல் விடுத்துள்ளார்.

மலாய் அமைப்புகள் சில, தாய்மொழிப் பள்ளிகளில் மலாய் மொழியே மைய மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றன. இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் டிசம்பரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தாய்மொழிப் பள்ளிகள் குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் பரவலாக நடத்தப்படுகின்றன.

#TamilSchoolmychoice

ஜசெக, தேசிய நீரோட்டத்தில் இனங்களை இணைக்கும் அரசாங்க முயற்சிகளுக்குப் பெரும் இடையூறாக இருந்து வருகிறது என்றும் முகமட் அஷ்ராப் சாடியுள்ளார்.

தாய்மொழிப் பள்ளிகளில் பயிலும் பல மாணவர்களுக்கு நாட்டின் தேசிய மொழியான மலாய் மொழியை ஒழுங்காகப் பேசத் தெரியவில்லை என்றும் முகமட் அஷ்ராப் கூறியுள்ளார்.

“இந்த நாட்டிற்கு வேலை செய்ய வரும் வங்காளதேச, பாகிஸ்தானிய, நேப்பாளத் தொழிலாளர்கள் சில மாதங்களே இங்கு வேலை செய்த பின்னர் நன்றாக மலாய் மொழியில் உரையாடுகின்றனர். குடியுரிமை பெற்ற பல மலேசியர்களைவிட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சிறப்பாக மலாய் மொழியில் உரையாடும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றனர்” என்றும் முகமட் அஷ்ராப் தெரிவித்திருக்கிறார்.