Home நாடு “பிறருக்காகவும் சிந்தித்துச் செயல்படுவோம்” – சரவணன் கிறிஸ்துமல் வாழ்த்து

“பிறருக்காகவும் சிந்தித்துச் செயல்படுவோம்” – சரவணன் கிறிஸ்துமல் வாழ்த்து

469
0
SHARE
Ad

மனிதவள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி

மலேசியா மற்றும் உலக நாடுகளில் வாழும் கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துகள்.

பொதுவாக கிறிஸ்மஸ் தினத்தை உலக மக்கள் அனைவருமே கோலாகலமாக வரவேற்று, புத்தாண்டு வரை அந்தக் கொண்டாட்டம் நீடிப்பது வழக்கம். கிறிஸ்துவர்கள் மட்டும் என்றில்லாமல் பெரும்பாலானோர் கொண்டாடும், குறிப்பாக ஒன்று கூடுவது, பரிசுகளைப் பறிமாறிக் கொள்வது என்று உறவுகளை இணைக்கும் பெருநாளாகவும் இது அமைந்து வருகிறது.

மலேசியர்கள் ஒவ்வொரு பெருநாளையுமே மிகவும் குதூகலமாக, மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது வழக்கம். பொது விடுமுறை என்பதால், அதில் ஒரு தனி மகிழ்ச்சிதான். நண்பர்கள், உறவினர்கள் ஒன்று கூடல், உல்லாசச் சுற்றுலா செல்லுதல், விருந்து உபசரிப்புகள் என நாடே கோலாகலமாக இருக்கும்.

#TamilSchoolmychoice

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், அல்லது வருட இறுதியில் குடும்பத்தோடு உல்லாசச் சுற்றுலா என எங்கு சென்றாலும் புதிய நடைமுறைக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்துப் பாதுகாப்பாக இருங்கள். நாம் இன்னும் கொரோனா தொற்றிலிருந்து முற்றாக விடுபடவில்லை. எனவே சுகாதார, பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கவனமாக இருப்போம்.

கிறிஸ்துமஸ் அன்பின் வெளிப்பாடே. அன்பையும், அர்ப்பணிப்பையும் உணர்த்தும் ஏசுவின் பிறந்தநாளில், கொண்டாட்ட மகிழ்ச்சியில் நமக்காகவும், பிறருக்காகவும் சிந்தித்து செயல்படுவோம்.

மீண்டும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.