Home நாடு மூடா கட்சி அதிகாரபூர்வமாகப் பதிவு பெற்றது

மூடா கட்சி அதிகாரபூர்வமாகப் பதிவு பெற்றது

900
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மூடா என்னும் மலேசிய ஒற்றுமை ஜனநாயக கூட்டணி (Malaysian United Democratic Alliance -Muda) கட்சி கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி முறையாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதன் தோற்றுநர் தலைவரான சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

வெள்ளப் பாதிப்புகளில் மக்களுக்கு உதவத் தாங்கள் மும்முரமாக ஈடுபட்டிருப்பதால், மூடா கட்சியின் பதிவை ஒரு வாரம் கழித்தே அறிவிக்க வேண்டியிருக்கிறது என்றும் சைட் சாதிக் கூறினார்.

மூடா கட்சியின் பதிவுக்கு சங்கப் பதிவிலாகா மறுத்ததைத் தொடர்ந்து அந்தக் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

#TamilSchoolmychoice

மூடா கட்சியை உள்துறை அமைச்சு 14 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என, கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்தே மூடா கட்சி அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.