Home நாடு ஜோகூர் : வாக்களிப்பு தொடங்கியது – தேசிய முன்னணி 35 தொகுதிகளைக் கைப்பற்றும் என கருத்துக்...

ஜோகூர் : வாக்களிப்பு தொடங்கியது – தேசிய முன்னணி 35 தொகுதிகளைக் கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு

492
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்குத் தொடங்கியது. மாலை 6.00 மணி வரை வாக்களிப்பு மையங்கள் திறந்திருக்கும்.

ஜோகூர் தேர்தலில் மொத்தம் 1,021 வாக்களிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. இந்தத் தேர்தல் வாக்களிப்பு மையங்களில் மொத்தம் 4,630 வரிசைகள் இயங்கும்.

தேர்தல் பணிகளுக்கான 49,290 பணியாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

#TamilSchoolmychoice

2,539,606 வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தானியங்கி வாக்காளர் பதிவு மூலமும் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றிருப்பதாலும், ஜோகூர் வாக்காளர் எண்ணிக்கை 33.5 விழுக்காடு அதிரடியாக அதிகரித்திருக்கிறது.

இதற்கிடையில் “இல்ஹாம் சென்டர்” என்ற இயக்கம் நடத்திய கருத்துக் கணிப்பில் தேசிய முன்னணி 35 தொகுதிகளை வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் சுமார் 10 தொகுதிகளில்  வரை சுலபமாக வெற்றி பெற முடியும் என்றும் எஞ்சிய 11 தொகுதிகளை தேசிய முன்னணி, பக்காத்தான் ஹாரப்பான், பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய 3 கூட்டணிகளில் ஒன்று வெற்றி கொள்ளும் என்றும் அந்தக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.