ஆனால் அதிர்ச்சி தரும் மாற்றமாக அவருக்குப் பதிலாக மாச்சாப் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டத்தோ ஓன் ஹாபிஸ் காஸி புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் அம்னோ கட்சியில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. அம்னோ – தேசிய முன்னணியின் “போஸ்டர் போய்” என்னும் பிரச்சார முகமாக முன்னிறுத்தப்பட்ட ஹாஸ்னி முகமட் பிரச்சாரத்தால்தான் ஜோகூரில் மாபெரும் வெற்றியை தேசிய முன்னணி பதிவு செய்ய முடிந்தது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து புதிய மந்திரி பெசார் ஒருவர் நியமிக்கப்படலாம் என்னும் ஆரூடங்கள் வலுத்தன.
செவ்வாய்க்கிழமை ஜோகூரின் மந்திரி பெசாராக ஹாஸ்னி முகமட் மீண்டும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட வேளையில் அந்த பதவியேற்பு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று ஜோகூர் அரண்மனையில் நடைபெற்ற பதவியேற்பு சடங்கில் ஜோகூர் புதிய மந்திரி பெசாராக ஓன் ஹாபிஸ் காஸியை சுல்தான் நியமித்திருக்கிறார்.